• Fri. Feb 27th, 2026

24×7 Live News

Apdin News

T20 WC: இந்தியா வெஸ்ட் இண்டீஸ் உடன் மோதுவதற்கு முன்பு தீர்க்க வேண்டிய 2 பிரச்னைகள் என்ன?

Byadmin

Feb 27, 2026


இந்தியா - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

ஜிம்பாப்வேவுக்கு எதிராக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது இந்திய அணி. இந்த உலகப்கோப்பையில் இதுவரை பெரிய செயல்பாட்டைக் கொடுத்திடாத பேட்டர்கள் சேப்பாக்கத்தில் ரன்மழை பொழிந்தார்கள்.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் செயல்பாடு ஒருவகையில் திருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம், இந்தப் போட்டிக்குப் பிறகு சில சந்தேகங்களுமே கூட எழுந்திருக்கிறது.

பேட்டிங்கைப் பொறுத்தவரை இந்தியாவின் செயல்பாட்டில் திருப்திதான். அதிலும் குறிப்பாக உலகின் நம்பர் 1 டி20 பேட்டர் அபிஷேக் ஷர்மா தன்னுடைய இயல்பான ஆட்டத்தை இந்த ஆட்டத்தில் ஓரளவு வெளிப்படுத்தினார்.

அவர் ஆட்டத்தில் நம்பிக்கையும் வெளிப்பட்டது. முதலில் ஓரிரு பவுண்டரிகள் வந்த பிறகு அவர் முற்றிலும் மாறுபட்ட பேட்டராகத் தெரிந்தார். அபிஷேக் மீண்டும் ரன்கள் அடித்து ஃபார்முக்கு வந்திருப்பது ஒட்டுமொத்த பேட்டிங் யூனிட்டின் செயல்பாட்டிலுமே நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஹர்திக் பாண்ட்யா செயல்பாடு

அடுத்ததாக ஹர்திக் பாண்ட்யாவின் செயல்பாடு என்னை மிகவும் கவர்ந்தது.

By admin