• Wed. Mar 11th, 2026

24×7 Live News

Apdin News

T20 WC: இந்தியா 3-வது முறையாக கோப்பை வெல்ல காரணமான சாம்சன், பும்ரா

Byadmin

Mar 9, 2026


டி20 உலகக்கோப்பை, இந்தியா சாம்பியன், இந்தியா - நியூசிலாந்து, சாம்சன், பும்ரா

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணி மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பை வென்றிருக்கிறது. முதல் அணியாக அடுத்தடுத்து உலகக் கோப்பைகளை வென்றிருக்கிறது. எம்.எஸ்.தோனி, ரோஹித் ஷர்மா ஆகியோருக்குப் பிறகு சூர்யகுமார் அந்தக் கோப்பையை ஏந்திய போது அந்த உணர்வு அலாதியாக இருந்தது. இந்திய அணி கிரிக்கெட் ஆடிய விதம் நிச்சயம் எல்லோருக்கும் பெருமையாக இருந்திருக்கும்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி ஒரு வெற்றியை இந்தியா பெற்றிருக்கிறது. இதில் நியூசிலாந்தின் சில முடிவுகள் கேள்வி எழுப்புவதாக இருந்தது. டாஸ் வென்று பேட்டிங் எடுத்தது, மெக்கான்கீயை பிளேயிங் லெவனில் சேர்க்காதது போன்ற முடிவுகள் ஆச்சரியமாக இருந்தன. பவர்பிளேவில் தொடர்ச்சியாக வெளியேயே பந்துவீசிக் கொண்டிருந்தனர். எல்லாம் அப்படி நடக்கும்போது அபிஷேக் ஷர்மா குஷியாகி 18 பந்துகளில் ஒரு அதிவேக அரைசதம் அடித்துவிட்டார். சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் நியூசிலாந்து அணியின் சிறந்த கிரிக்கெட் வெளிப்படவில்லை.

அதேசமயம், இந்தியா மிகச் சிறந்த கிரிக்கெட் ஆடியிருக்கிறது. ஆமதாபாத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்தி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்து சொந்த மண்ணில் சாம்பியன் ஆகியிருக்கிறது.

சொல்லப்போனால் இது முழுக்க முழுக்க எளிதான ஒரு பயணமாகவும் இருக்கவில்லை. ஒருகட்டத்தில் சூப்பர் 8 சுற்றை இந்தியா தாண்டுமா என்ற கேள்வி எழத்தானே செய்தது. ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அந்தத் தோல்வி சரியான நேரத்தில் வந்தது என்றுதான் சொல்லவேண்டும். அது, இந்திய அணி சரியான தருணத்தில் எழுச்சி பெறுவதற்கு வித்திட்டது. அதன்பிறகு இந்திய அணி அரையிறுதி, இறுதி போட்டிகளில் முழு ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது.

20 அணிகள் பங்கேற்கும், 30 நாள்களுக்கு மேல் நடக்கும் ஒரு தொடரை வெல்வது எளிதானதல்ல. முக்கியமான தருணங்களில் நீங்கள் வெற்றி பெறவேண்டும். அப்படி முக்கியமான தருணங்களில் முக்கியமான வீரர்கள் எழுச்சி பெற்று இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இந்திய அணியின் மிகப் பெரிய பலமே அதுதான் – இந்த அணி ஓரிரு வீரர்களை மட்டுமே நம்பி இருக்கவில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு வீரர் அணியை வெற்றி பெறவைத்திருக்கிறார். அதுபோல் வெவ்வேறு வீரர்கள் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.

By admin