• Thu. Mar 5th, 2026

24×7 Live News

Apdin News

T20 WC: இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதியின் முடிவை தீர்மானிக்கப் போவது யார்?

Byadmin

Mar 5, 2026


இந்தியா - இங்கிலாந்து - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

இந்தியா vs இங்கிலாந்து – இதுவொரு பிளாக்பஸ்டர் அரையிறுதிப் போட்டியாக இருக்கப்போகிறது. வான்கெடேவில் நடக்கும் இந்தப் போட்டிக்குள் இரு அணிகளுமே ஒரே மாதிரியான வெற்றிகளைத் தொடர்ந்து களமிறங்குகின்றன.

பரபரப்பான போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வந்திருப்பது அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும்.

அதேபோல் தான் இங்கிலாந்தும். அவர்களின் கடைசி சூப்பர் 8 போட்டியில் தோற்க வேண்டிய சூழ்நிலையில் இருந்து நியூசிலாந்தை வீழ்த்தியது.

எப்போதுமே கடினமான போட்டியை வென்று வருவது எந்த அணிக்குமே கூடுதல் நம்பிக்கையைக் கொடுக்கும்.

தடுமாறும் இங்கிலாந்து டாப் ஆர்டர்

இந்தியா - இங்கிலாந்து - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த உலகக் கோப்பையின் 7 போட்டிகளில் மொத்தம் 62 ரன்களே எடுத்திருக்கிறார் ஜாஸ் பட்லர்

இந்திய அணியைப் பொறுத்தவரை இங்கிலாந்தை விட நல்ல நிலையில் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். இங்கிலாந்து அணிக்கு பேட்டிங்கில் பெரிய குறைபாடு இருக்கிறது. அவர்களின் ஓப்பனர்கள் இன்னும் நல்ல தொடக்கம் பெறத் தவறுகிறார்கள். ஃபில் சால்ட், ஜாஸ் பட்லர் இருவருமே தொடர்ந்து தடுமாறுகிறார்கள். அதனால், பவர்பிளேவில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழக்கிறது. அதனால், இந்த அரையிறுதியில் இந்திய அணி பந்துவீச்சில் நல்ல தொடக்கம் கிடைப்பதற்கான வாய்ப்பு நன்றாகவே இருக்கிறது.

By admin