• Mon. Jun 15th, 2026

24×7 Live News

Apdin News

T20 WC: இந்திய மகளிர் அணி பாகிஸ்தான் சவாலை எளிதில் முறியடித்தது எப்படி?

Byadmin

Jun 15, 2026


ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா அபார வெற்றி பெற்றது (ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்பிரீத்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா அபார வெற்றி பெற்றது (ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்பிரீத்)

    • எழுதியவர், மனோஜ் சதுர்வேதி
    • பதவி, மூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி ஹிந்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பிரிட்டனின் எஜ்பாஸ்டன் நகரில் நடந்த ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் போது மைதானம் நீல நிறமாக மாறியிருந்தது.

இந்திய அணியும் தனது ரசிகர்களை ஏமாற்றவில்லை. பாகிஸ்தான் மீதான தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்து 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது டி20 உலகக் கோப்பை பயணத்தைத் தொடங்கியுள்ளது.

ஆசியாவிற்கு வெளியே பாகிஸ்தானுக்கு எதிராக எப்போதும் வெற்றி பெறும் சாதனையை இந்தியா தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தியாவின் வெற்றியில் தீப்தி சர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா முக்கிய பங்கு வகித்தார்கள்.

அணி இக்கட்டான நிலையில் இருந்த போது மந்தனா தனது அரைசதம் அணியை மீட்டெடுத்தார். அதே நேரத்தில் தீப்தி, பாகிஸ்தான் பேட்டிங்கின் போது வேகமான தொடக்கத்தைக் கட்டுப்படுத்தியது மட்டுமின்றி, 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகி விருதையும் வென்றார்.

ஒரு உலகக் கோப்பையிலிருந்து மற்றொரு உலகக் கோப்பை வரை தீப்தி

தீப்தி சர்மா மகளிர் டி20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராகவும் மாறியுள்ளார்

பட மூலாதாரம், Philip Brown/Getty Images

படக்குறிப்பு, தீப்தி சர்மா மகளிர் டி20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராகவும் மாறியுள்ளார்

தீப்தி சர்மா தனது சிறந்த பந்துவீச்சால் இந்தியாவை வெற்றி பெற வைப்பதை ஒரு வழக்கமாகவே மாற்றிக் கொண்டுள்ளார். ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியனாவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

By admin