• Fri. May 30th, 2025

24×7 Live News

Apdin News

Thug Life: தமிழிலிருந்து பிறந்தது கன்னடம் : கமல்ஹாசனின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

Byadmin

May 29, 2025


கன்னட மொழி, கமல் ஹாசன்,  தக் லைஃப்

பட மூலாதாரம், @RKFI

தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசியிருந்த நடிகர் கமல் ஹாசன், தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்துக்கு கர்நாடக மாநிலத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கமல்ஹாசன் கன்னட மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கோருகின்றனர்.

இந்நிலையில், இன்று (மே 28) இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் கமல் ஹாசன், “அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா, “கன்னட மொழிக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. அது அவருக்கு (கமல் ஹாசன்) தெரியாது.” என்று தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கமல் பேசியது என்ன?

கன்னட மொழி, கமல் ஹாசன்,  தக் லைஃப்

பட மூலாதாரம், @RKFI

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் பங்கேற்றிருந்தார்.

By admin