• Sun. Feb 22nd, 2026

24×7 Live News

Apdin News

Tiger Kingdom பூங்காவில் 72 புலிகள் கிருமித்தொற்றால் உயிரிழப்பு!

Byadmin

Feb 22, 2026


தாய்லாந்தில் செயல்பட்டு வரும் ‘Tiger Kingdom’ எனும் தனியார் விலங்குப் பூங்காவில் குறைந்தது 72 புலிகள் நோய்தொற்றால் உயிரிழந்துள்ளன.

மரணங்களுக்கான காரணத்தை கண்டறிய மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், ‘Canine Distemper’ எனப்படும் ஆபத்தான வைரஸ் தொற்று புலிகளுக்கு ஏற்பட்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த வைரஸ் பொதுவாக நாய்கள் உள்ளிட்ட சில விலங்குகளை பாதிப்பதுடன், காட்டுவிலங்குகளுக்கும் பரவக்கூடியதாகும்.

நுண்கிருமி தாக்கம் காரணமாக புலிகளின் சுவாசப் பாதையில் கடுமையான கோளாறுகள் ஏற்பட்டிருந்ததாகவும், அது அவற்றின் உடல்நிலையை வேகமாகக் குறைத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேசிய கால்நடைத் துறையின் தலைவர் கூறுகையில், பூனை அல்லது நாய் போன்ற இல்லப் பிராணிகளைப் போல புலிகளின் உடல்நலக்குறைவுகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது சிரமமானது என்றார். நோயின் அறிகுறிகள் தெளிவாகத் தெரிய வரும் நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு குறைந்து விடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

By admin