0
TikTok தளம், தனது அமெரிக்கப் பிரிவை விற்கும் ஒப்பந்தத்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்க முதலீட்டாளர்கள் தலைமையிலான Oracle, Silver Lake மற்றும் MGX ஆகிய நிறுவனங்கள் TikTok-இன் அமெரிக்கப் பிரிவில் 45 சதவீத பங்குகளை வாங்கியுள்ளன.
சீனாவைச் சேர்ந்த Bytedance நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் TikTok செயல்பட்டு வருகிறது. தேசியப் பாதுகாப்புக் காரணங்களை முன்வைத்து, Bytedance நிறுவனம் TikTok-இன் அமெரிக்கப் பிரிவை விற்பனை செய்ய வேண்டும் என வாஷிங்டன் அரசு பல ஆண்டுகளாக அழுத்தம் கொடுத்து வந்தது. தற்போது இந்த நீண்டகால சர்ச்சைக்கு முடிவுகட்டும் வகையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.
TikTok நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சியூ ஷோ ஸி (Chew Shou Zi), அமெரிக்கப் பிரிவின் 80 சதவீதத்திற்கும் மேலான பங்குகள் விற்கப்படும் என ஊழியர்களிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. டொனால்ட் டிரம்ப் தனது முதல் ஆட்சிக் காலமான 2020ஆம் ஆண்டில் TikTok தளத்தை அமெரிக்காவில் தடை செய்ய முற்பட்டார்.
தற்போது அமெரிக்காவில் மட்டும் சுமார் 170 மில்லியன் பயனர்கள் TikTok தளத்தை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.