• Sat. Apr 4th, 2026

24×7 Live News

Apdin News

`TN 2026' விஜய்க்கு எதிரான திரைப்படமா? பிரஸ்மீட்டில் இயக்குநர் கூறியது என்ன?

Byadmin

Apr 4, 2026


இயக்குநர் உமாபதி ராமையா இயக்கத்தில் நடராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “TN 2026”. இந்தப் படத்தின் கதையை நடிகர் தம்பி ராமையா எழுத, படத்தை அவரது மகன் இயக்கியுள்ளார்.

தம்பி ராமையா, எம்.எஸ். பாஸ்கர் முக்கிய கத்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘TN 2026 தங்க நட்சத்திரம்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் டீசர் காட்சிகள் நடிகர் விஜயின் அரசியல் வருகையை குறிப்பதாகவும், இந்தப் படம் விஜய்க்கு எதிராக எடுக்கப்பட்டு இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில், படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

அப்போது பேசிய படத்தின் இயக்குநர் உமாபதி ராமையா, “இது யாருக்கும் எதிரான திரைப்படம் இல்லை. நாங்கள் அவமதிப்பதாக சொல்லப்படும் நபர் ஒரு சிங்கம். சிங்கத்தை யாராவது அவமதிக்க முடியுமா? இதை வெறும் படமாக மட்டும் பாருங்கள், அரசியலாக்காதீர்கள்,” என்று தெரிவித்தார்.

By admin