• Sat. Apr 4th, 2026

24×7 Live News

Apdin News

TN Assembly Election | நான் கலைஞரின் மகன்.. சொன்னதை செய்வேன் – மு.க.ஸ்டாலின்

Byadmin

Apr 4, 2026


தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் தொகுதிகளின் வேட்பாளர்கள், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

* புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதம் ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* 1.31 கோடி மகளிருக்கு இனி மாதம் ரூ.2000 உரிமைத்தொகை வழங்கப்படும்.

* நெல் குவிண்டாலுக்கு ரூ.3500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பிணையில்லாமல் ரூ.5 லட்சம் கடன் வழங்கப்படும்.

* அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 புதிய பேருந்துகள் இயக்கப்படும்.

* இல்லத்தரசிகளுக்கு ரூ.8000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும்.

* வடசேரியில் நவீன ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

* இல்லத்தரசிகள் திட்டம் பற்றி தான் தமிழகம் முழுக்க பேச்சாக உள்ளது.

* நான் கலைஞரின் மகன் சொன்னதை செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

By admin