மேஷம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். அதிகம் செலவாகும் என்று நினைத்த காரியம் குறைந்த செலவில் முடியும்.
ரிஷபம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். வருமானம் திருப்தி தரும். வாகன யோகம் உண்டு. தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.
மிதுனம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவை காட்டிலும் செலவு கூடும். மறதியால் சில தொல்லைகளுக்கு ஆட்படலாம்.
கடகம்
இனிய தகவல் இல்லம் தேடி வரும் நாள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு உதவி கிடைக்கும்.
சிம்மம்
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். தொழில் முயற்சிக்கு தொலைபேசி வழித்தகவல் உறுதுணையாக இருக்கும்.
துலாம்
எதிரிகள் உதிரியாகும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரும். வருமானம் திருப்தி தரும். உடன் பிறப்புகள் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும்.
விருச்சிகம்
புதிய பாதை புலப்படும் நாள். புகழ் கூடும். பிரபலஸ்தர்களின் சந்திப்பு உண்டு. வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
தனுசு
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். ஒரு வேலையை முடிக்க ஒன்றுக்கு இரண்டு முறை அலைய நேரிடலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மகரம்
சுபச்செலவுகள் ஏற்படும் நாள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
கும்பம்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். சேமிப்பு உயரும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
மீனம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணவரவு உண்டு. நண்பர்கள் நம்பிக்கைக்குரியவிதம் நடந்து கொள்வர். வீட்டுத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.