• Wed. Mar 18th, 2026

24×7 Live News

Apdin News

Today Rasipalan | இன்றைய ராசிபலன் 18.3.2026: இவர்களுக்கு சுபச்செய்திகள் வந்து சேரும்

Byadmin

Mar 18, 2026


மேஷம்

தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். பிள்ளைகள் மூலம் உதிரி வருமானங்கள் உண்டு. கல்யாணக் கனவுகள் நனவாகும்.

ரிஷபம்

நட்பால் நன்மை கிட்டும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். பெற்றோர் வழி பிரச்சனைகள் அகலும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

மிதுனம்

நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். கடன் சுமை குறையும்.

கடகம்

எதையும் யோசித்துச் செய்ய வேண்டிய நாள். வரவை விட செலவு கூடும். பயணங்கள் அலைச்சல் தருமே தவிர ஆதாயம் தராது. நட்பு பகையாகும்.

சிம்மம்

கனிவாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். வருமானம் திருப்தி தரும்.

கன்னி

மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். சொத்துகள் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.

துலாம்

சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வீடு, வாங்க போட்ட திட்டம் நிறைவேறும்.

விருச்சகம்

தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

தனுசு

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். தொழில் கூட்டாளிகளால் குழப்பங்கள் உருவாகும்.

மகரம்

ஆதாயம் அதிகரிக்கும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பம் கைகூடிவரும்.

கும்பம்

வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்துகொள்ளும் நாள். தொழில் வளர்ச்சி உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கட்டிடப் பணி தொடரும்.

மீனம்

வரன்கள் வாயில் தேடி வரும் நாள். ஆதாயம் தரும் தகவலில் அக்கறை காட்டுவீர்கள். செயல்பாடுகளில் பொறுமை தேவை. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

By admin