மேஷம்
இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. வருங்கால நலன் கருதி சேமிக்க முற்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
ரிஷபம்
ஆதாயம் தரும் தகவலில் அக்கறை காட்டும் நாள். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அனுகூலம் கிடைக்கும்.
மிதுனம்
பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வர். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள்.
கடகம்
வளர்ச்சி கூடும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் ஏற்படும். உற்ற நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். உத்தியோக உயர்வு உண்டு.
சிம்மம்
மனக்குழப்பம் தீரும் நாள். வியாபார விரோதம் விலகும் அரைகுறையாக நின்ற பணிகளைத் தொடருவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.
கன்னி
வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
துலாம்
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். பழைய கடன்களை அடைக்க புதிய வழி பிறக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும்.
விருச்சிகம்
சுபச்செய்தி வந்து சேரும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தொழில் ரீதியாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
தனுசு
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நண்பர்களால் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் மனம் வருத்தப்படும்படியான செயல் நடைபெறும்.
மகரம்
தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கிக்கொடுத்த தொகை வந்து சேரும்.
கும்பம்
சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். குலதெய்வ வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
மீனம்
நாடி வந்தவர்களுக்கு நன்மை செய்யும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.