• Wed. Jan 15th, 2025

24×7 Live News

Apdin News

உயிருக்கு அச்சுறுத்தல்; அமெரிக்கர்களுக்கு பயணத்தடை அறிவுறுத்தல்!

Byadmin

Jan 15, 2025


உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற பாதுகாப்புக் காரணத்தைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கர்கள் சில நாடுகளுக்கு பயணிக்க பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, ரஷ்யா, வட கொரியா, ஈரான், ஈராக், உக்ரைன், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், சிரியா, லெபனான், லிபியா, சோமாலியா, சூடான், வெனிசுலா மற்றும் ஏமன் உள்ளிட்ட நாடுகள் இந்தப் பட்டியலில் உள்ளடங்கியுள்ளன.

மேற்படி நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் – ரஷ்ய போர் மற்றும் சிரியாவின் உள்நாட்டு போர் ஆகியவை ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளன.

அத்துடன், சோமாலியா, லிபியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் பயங்கரவாத குழுக்களின் அச்சுறுத்தல்கல் தொடர்கின்றது.

பெலாரஸ் மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளில் அரசியல் நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.

மேலும், வடகொரியாவில் வெளிநாட்டினர் மீது கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளமை ஆகிய இதற்கான காரணங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

The post உயிருக்கு அச்சுறுத்தல்; அமெரிக்கர்களுக்கு பயணத்தடை அறிவுறுத்தல்! appeared first on Vanakkam London.

By admin