• Thu. Jun 18th, 2026

24×7 Live News

Apdin News

ஃபிஃபா 2026: இந்தியா கால்பந்து உலகக் கோப்பையில் இதுவரை விளையாட முடியாமல் இருப்பது ஏன்?

Byadmin

Jun 18, 2026


ஃபிஃபா 2026: இந்தியா கால்பந்து உலகக் கோப்பையில் இதுவரை விளையாட முடியாமல் இருப்பது ஏன்?

பட மூலாதாரம், NurPhoto via Getty Images

    • எழுதியவர், கௌதம் பட்டாச்சார்யா
    • பதவி, விளையாட்டு எழுத்தாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

இந்தியா எப்போதாவது ஃபிஃபா உலகக் கோப்பையில் விளையாடுமா?

இது, பல ஆண்டுகளாக இந்திய கால்பந்து ரசிகர்கள் கேட்டு வரும் கேள்வி. “உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழா” என்று அழைக்கப்படும் ஃபிஃபா உலகக் கோப்பை கடந்த வாரம் தொடங்கிய நிலையில், இந்தக் கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

‘ப்ளூ டைகர்ஸ்’ என்று அழைக்கப்படும் இந்திய ஆண்கள் தேசிய கால்பந்து அணியை உன்னிப்பாகக் கவனித்து வருவோருக்கு, இந்தக் கேள்வி ஒரு சலிப்பூட்டும் வழக்கமான விஷமாகிவிட்டது.

அதற்கான காரணம் எளிமையானது” ஆசிய மண்டலத்திற்கான ஆரம்பக்கட்ட தகுதிச் சுற்றுகளைத் தாண்டி, உலகக் கோப்பைக்குச் செல்லும் வாய்ப்பை இந்தியா இதுவரை ஒருமுறைகூடப் பெறவில்லை.

அதேவேளையில், ஒரு சுவாரஸ்யமான முரண்பாடும் உள்ளது. இந்தியா ஒருமுறைகூட ஃபிஃபா உலகக் கோப்பையில் விளையாடியதில்லை என்றாலும், மேற்கு வங்கம், கேரளம், கோவா போன்ற கால்பந்து மீது ஆர்வமுள்ள மாநிலங்களில் இந்தப் போட்டி மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்தப் பகுதிகளில் உள்ள கால்பந்து ரசிகர்கள் பல்வேறு சர்வதேச அணிகளை ஆர்வத்துடன் ஆதரிப்பதுடன், ஒவ்வொரு போட்டியையும் தவறாமல் கவனிக்கிறார்கள்.

By admin