• Thu. Oct 1st, 2026

24×7 Live News

Apdin News

ஃப்ளைதுபாய் விமானம்: இந்திய விமானி ஸ்மித் என்ன செய்தார்? டிரம்ப் முதல் நெதன்யாகு வரை ‘ஹீரோ’ என பாராட்டு

Byadmin

Oct 1, 2026


ஸ்மித் மச்சாரைப் பாராட்டிய  மோதி, டிரம்ப்

படக்குறிப்பு, ஸ்மித் மச்சார்
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஃப்ளைதுபை விமானம் FZ1073-ல் கத்தியால் குத்தப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சார், மயங்கி விழுவதற்கு முன்பு விமானத்தின் காக்பிட் கதவைத் திறந்ததாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேலிய பயணி யானிவ் ஹயூன், புதன்கிழமை பென் குரியான் விமான நிலையத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் இதைத் தெரிவித்தார்.

“கத்தியால் குத்தப்பட்ட விமானி கதவுக்கு மிக அருகில் இருந்தார். அதனால், எங்களால் கதவைத் திறப்பது கடினமாக இருந்தது” எனவும் அவர் கூறினார்.

“அவர் தனது சமயோசிதமான செயல்பாட்டால் எங்களுக்காகக் கதவைத் திறந்துவிட்டு, பின்னர் மயங்கி விழுந்திருக்க வேண்டும் என்பதுதான் என் முடிவு” என்று அவர் கூறினார்.

பின்னர் நெதன்யாகுவும் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் இந்தச் சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, மச்சாரின் துணிச்சலைப் பாராட்டினார்.

By admin