• Tue. Apr 28th, 2026

24×7 Live News

Apdin News

அகமது வாஹிதி: ஐஆர்ஜிசி தலைமைத் தளபதி ஏன் பொதுவெளியில் காணப்படுவதில்லை?

Byadmin

Apr 28, 2026


ஜெனரல் அகமது வாஹிதி தற்போது ஐஆர்ஜிசியின் உயர்மட்டத் தளபதியாக உள்ளார்.

பட மூலாதாரம், FARS

படக்குறிப்பு, ஜெனரல் அகமது வாஹிதி தற்போது ஐஆர்ஜிசியின் உயர்மட்டத் தளபதியாக உள்ளார்.

இரான் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அகமது வாஹிதி, மார்ச் தொடக்கத்தில் இருந்தே ஊடகங்களில் தென்படவில்லை.

மார்ச் மாதத்தில்தான் அவர் ஐஆர்ஜிசியின் இந்தப் உயரிய பதவியில் நியமிக்கப்பட்ட செய்தி வெளியானது.

அவர் கடைசியாக பிப்ரவரி 11 அன்று பொதுவெளியில் காணப்பட்டார். அப்போது தெற்கு நகரமான ஷிராஸில் 1979 புரட்சியின் 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடந்த பேரணியில், இரானுக்கு எதிராக எந்தவொரு தவறான கணக்கீடுகளையும் செய்ய வேண்டாம் என்று ‘எதிரிக்கு’ அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மார்ச் 1 அன்று சில செய்தி இணையதளங்கள், வாஹிதி ஐஆர்ஜிசியின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியிட்டன.

இருப்பினும், இந்த இணையதளங்கள் முக்கியமான அரசு நிறுவனங்களோ அல்லது ஐஆர்ஜிசி சார்ந்த அமைப்புகளோ அல்ல.

By admin