கராத்தே கலையில் மிக உயர்ந்த பட்டமான “ஷிஹான்” பட்டமானது சுவிஸ் வாழ் இலங்கைத் தமிழரான விபுலானந்தன் கௌரிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் இரண்டு நாள் சர்வதேச செயலமர்வைத் தொடர்ந்து கருப்புப்பட்டி வழங்கும் நிகழ்வு நேற்று (26) சூரிச்சில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் நான்காவது தலைமுறை தலைமை பயிற்சியாசிரியர் கௌரவிக்கப்பட்டபோதே “ஷிஹான்” பட்டம் அளிக்கப்பட்டது.

ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் சுவிட்சர்லாந்து நாட்டுக்கான பிரதிநிதியும், தலைமை ஆசிரியரும், சுவிஸ் கராத்தே சம்மேளனத்தின் நடுவர் குழாமின் தேசிய கராத்தே நடுவருமான சிகான் விபுலானந்தன் கௌரிதாசன், சுவிட்ஸர்லாந்து செங்காளன் நகர பாராளுமன்றத்தின் முதல்வராக சமூக செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார், சிரேஷ்ட மாணவர்கள் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டனர்
“ஷிஹான்” (Shihan) பட்டம் ஜப்பான் இதோசுக்காய் கராத்தே அமைப்பினால் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த உயர்நிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்தது.
இந்த உரிமம் முதல் தடவையாக ஜப்பான் நாட்டவர் அல்லாத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கராத்தே “ஷிஹான்” உரிமம் என்பது கராத்தே கலையில் மிகுந்த அனுபவமும் உயர்ந்த நிலையும் பெற்ற ஒருவருக்கு வழங்கப்படும் ஒரு பெருமைக்குரிய சான்றிதழாகும்.
“ஷிஹான்” என்ற பட்டம் ஒரு முதன்மை பயிற்சியாளரை குறிக்கிறது. சிறந்த தொழில்நுட்பத் திறன், ஆழமான அறிவு, வலுவான தலைமைத்துவம் மற்றும் இந்தக் கலையில் பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவரைக் குறிக்கும்.
இந்த உரிமம் ஒரு பதவி உயர்வை மட்டுமன்றி, உயர்ந்த தரத்தில் கராத்தே பயிற்சி அளித்தல், வழிகாட்டுதல் மற்றும் அதன் வளர்ச்சிக்கு அவர் செய்த பங்களிப்பையும் அங்கீகரிக்கிறது.





The post சுவிஸ் வாழ் இலங்கைத் தமிழருக்கு கராத்தே கலையின் உயரிய “ஷிஹான்” பட்டம்! appeared first on Vanakkam London.