• Tue. Apr 28th, 2026

24×7 Live News

Apdin News

ஆர்சிபி மிரட்டல் பந்துவீச்சு – டெல்லி அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆர்.சி.பி.

Byadmin

Apr 27, 2026


ஆர்சிபி அபார பந்துவீச்சு - 75 ரன்களுக்கு டெல்லி கேபிட்டல்ஸ் ஆல் அவுட்

பட மூலாதாரம், ANI

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரின் 39வது போட்டியில் இன்று (ஏப்ரல் 27) டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டெல்லியில் நடந்த இந்தப் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆர்சிபி.

இந்த சீசன் இவ்விரு அணிகளும் இதற்கு முன் மோதிய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தது. பெங்களூருவில் நடந்த அந்தப் போட்டியில் 1 பந்து மீதமிருக்கும்போது 175 ரன்களை சேஸ் செய்தது கேபிட்டல்ஸ்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. டெல்லி அணிக்காக கைல் ஜேமீசன் மற்றும் சஹில் பரக் ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். துஷ்மந்தா சமீராவும் அந்த அணியில் சேர்க்கப்பட்டார். கடந்த போட்டியில் ஃபீல்டிங் செய்யும்போது தலையில் காயமடைந்த லுங்கி எங்கிடி இந்தப் போட்டியில் விளையாடவில்லை.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ், ஆர்சிபி வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 75 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆர்சிபி பௌலர்கள் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

அடுத்து விளையாடிய ஆர்சிபி அணி 6.3 ஓவர்களிலேயே இலக்கை சேஸ் செய்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

By admin