ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் போட்டியில் இன்று டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன. அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி பெங்களூருவின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல், 4வது ஓவரிலேயே 6 விக்கெட்டுகளை இழந்தது. மேலும் முதல் 6 ஓவர்கள் முடிவில் வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஐபிஎல் வரலாற்றிலேயே குறைந்தபட்ச பவர்பிளே ஸ்கோர் என்ற மோசமான சாதனையையும் படைத்தது.
இதனையடுத்து கெயில் ஜேமிசன், பொரேல் இணைந்து ஆட்டத்தை கொண்டு செல்வார்கள் என நினைத்த நிலையில், 13 ஓவரில் ஜேமிசனும் அவுட்டானார்.
ஒருவழியாக தட்டு தடுமாறி 15 ஓவர்களை தாண்டிய டெல்லி, 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 75 ரன்கள் மட்டுமே குவித்தது. இது இந்த சீசனின் மிகக்குறைந்த ஸ்கோராகும்.
தொடர்ந்து பெங்களூரு அணி விளையாட உள்ளது.