• Thu. Jul 3rd, 2025

24×7 Live News

Apdin News

அஜித்குமாரை சித்ரவதை செய்ய ஆணையிட்ட காவல்துறை உயர் அதிகாரி யார்? – அன்புமணி கேள்வி | Who was the top police officer who order to torture of Ajith Kumar? – Anbumani

Byadmin

Jul 3, 2025


சென்னை: அஜித்குமாரை சித்ரவதை செய்யும்படி, காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு காவல்துறை உயரதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும், என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்களால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்ரவதை செய்யும்படி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு காவல்துறை உயரதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விட்டாலும் தமிழகக் காவல்துறையை சீர்திருத்த இத்தகைய அதிகாரிகளை அடையாளம் கண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.



By admin