• Wed. Jul 9th, 2025

24×7 Live News

Apdin News

அஜித்குமார் மீதான திருட்டு வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: ஆக.20-க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு | Theft case against Ajith Kumar transferred to CBI

Byadmin

Jul 9, 2025


மதுரை: கோ​யில் காவலாளி அஜித்​கு​மார் மீதான திருட்டு வழக்​கை​யும் சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றிய உயர் நீதி​மன்​றம், ஆக. 20 ல் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யு​மாறு சிபிஐக்கு உத்​தர​விட்​டது. சிவகங்கை மாவட்​டம் மடப்​புரம் கோயில் காவலாளி அஜித் குமார், நகை திருட்டு விசா​ரணை​யின்​போது போலீ​ஸார் தாக்​கிய​தில் உயி​ரிழந்​தார். இந்த வழக்​கில் 5 போலீ​ஸார் கைது செய்யப்பட்​டனர்.

இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு உத்​தர​விட்​டது. இந்​நிலை​யில், அஜித்​கு​மார் உயி​ரிழப்பு தொடர்​பான வழக்​கு​கள் உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஏ.டி. மரிய கிளாட் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தன. மதுரை மாவட்ட நீதிபதி தனது விசா​ரணை அறிக்​கையை தாக்​கல் செய்​தார். அரசுத் தரப்​பில் ஆஜரான கூடு​தல் அட்​வகேட் ஜெனரல் அஜ்மல்​கான், “வழக்கு விசா​ரணை சிபிஐக்கு மாற்​றப்​பட்​டுள்​ளது. அஜித்​கு​மாரின் சகோ​தரருக்கு அரசு வேலை வழங்​கப்​பட்​டுள்​ளது.

வீட்டு மனை பட்டா வழங்​கப்​பட்​டு உள்​ளது. இதனால் தனி​யாக இழப்​பீடு வழங்​கத் தேவை​யில்​லை” என்​றார். மனு​தா​ரர்​கள் சார்​பில் வழக்​கறிஞர்​கள் ஹென்​றி​திபேன், மாரீஸ்​கு​மார், ஆயிரம் செல்​வக்​கு​மார், அருண் சுவாமி​நாதன், தீரன் திரு​முரு​கன் ஆகியோர் ஆஜராகினர். அவர்​கள் வாதிடும்​போது, “சிபிஐ விசா​ரணை தாமத​மாகும்.

எனவே, வழக்கை சிறப்பு புல​னாய்​வுக் குழு விசா​ரணைக்கு மாற்ற வேண்​டும். அஜித்​கு​மார் உயி​ரிழந்த வழக்கு மட்​டுமே சிபிஐக்கு மாற்​றப்​பட்​டுள்​ளது. பேராசிரியை நிகிதா அளித்த புகாரின் பேரில் அஜித்​கு​மார் மீது திருட்டு வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. அந்த வழக்கு சிபிஐக்கு மாற்​றப்​பட​வில்​லை.

அஜித்​கு​மார் குடும்​பத்​துக்கு அரசு சார்​பில் இழப்​பீடு வழங்க உத்​தர​விட வேண்​டும். அஜித்​கு​மாரின் சகோ​தரர் உட்பட 3 பேரை போலீ​ஸார் கடுமை​யாகத் தாக்​கி​யுள்​ள​தால், அவர்​களுக்​கும் இழப்​பீடு வழங்க வேண்டும்” என்​றனர்.

பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: மாவட்ட நீதிபதி விசா​ரணை அறிக்​கை​யில் அஜித்​கு​மார் இறப்பு காவல் மரணம் என்​பது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. உள்​ளூர் போலீ​ஸா​ரால் மரணம் ஏற்​படுத்​தப்​படும் வழக்​கு​களை, அதே போலீ​ஸார் விசா​ரித்​தால் நீதி, உண்மை வெளிவ​ராது. அந்த வகை​யில் அஜித்​கு​மார் வழக்கு விசா​ரணையை சிபிஐக்கு மாற்றி அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

மாவட்ட நீதிபதி அறிக்​கை​யில், வழக்கு தொடர்​பான முக்​கிய ஆதா​ரங்​கள் அழிக்​கப்​பட​வில்லை எனக் கூறப்​பட்​டுள்​ளது. இது சிபிஐ விசா​ரணைக்​குப் பெரிதும் உதவும். அஜித்​கு​மார் மீதான திருட்டு வழக்​கை​யும் சிபிஐ விசா​ரிக்க வேண்​டும். அஜித்​கு​மார் உயி​ரிழப்பை மாவட்ட நீதிப​தி​யும், தமிழக அரசும் காவல் மரணம் என ஒப்​புக்​கொண்​டுள்ள நிலை​யில், அவரது குடும்​பத்​துக்கு அரசு உரிய இழப்​பீடு வழங்​கவேண்​டும். இவ்​வழக்​கின் விசா​ரணை அதி​காரி மற்​றும் விசா​ரணைக் குழுவை சிபிஐ இயக்​குநர் ஒரு வாரத்​தில் நியமிக்க வேண்​டும்.

சிபிஐ அதி​காரி விசா​ரணையை உடனடி​யாகத் தொடங்​கி, ஆக. 20-ல் நீதி​மன்​றத்​தில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்ய வேண்​டும். சிபிஐ விசா​ரணை குழு​வுக்​குத் தேவை​யான வசதி​கள் மற்​றும் போதிய ஒத்​துழைப்பை வழங்க வேண்​டும். வழக்​கின் சாட்​சிகளுக்​குப் போலீஸ் பாது​காப்பு வழங்க வேண்​டும். அஜித்​கு​மார் குடும்​பத்​துக்கு இடைக்​கால இழப்​பீடு வழங்​கு​வது தொடர்​பாக அரசு 2 வாரத்​தில் பதில் அளிக்க வேண்​டும். இவ்​வாறு நீதிப​தி​கள் உத்​தர​வில் கூறி​யுள்​ளனர்.



By admin