• Fri. Nov 20th, 2026

24×7 Live News

Apdin News

அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் பிசியாகும் சாம் சி.எஸ்.!

Byadmin

Nov 20, 2026


பான் இந்தியா திரைப்படம்:

குறிப்பாக, ராம் பொதினேனி தனது இயக்குநர் பயணத்தை தொடங்கும் #RAPO23 திரைப்படம் மிகப்பெரிய அளவில் உருவாகி வருகிறது. ராம் பொதினேனி நடிப்பதுடன், எழுதி இயக்கும் இப்படம் சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் பான் இந்திய பிரம்மாண்ட படைப்பாக உருவாகிறது.

‘The Story of a Lone Wolf’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள படத்தின் புதிய போஸ்டர், ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணா பொதினேனி தயாரிக்கும் இப்படத்தில் சம்யுக்தா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவை திருநாவுக்கரசு கவனிக்கிறார். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். ராம் பொதினேனியின் இயக்குநர் அறிமுக படத்தில் சாம் சி.எஸ். இணைந்திருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், சாம் சி எஸ் இசையமைப்பில் ‘டிமான்டி காலனி 3’ திரைப்படமும் அடுத்ததாக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தயாராகி வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலான ‘ரத்தத்த தா’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‘டிமான்டி காலனி 2’ படத்தின் பின்னணி இசை மூலம் ரசிகர்களை மிரள வைத்திருந்த சாம் சி.எஸ்., மூன்றாம் பாகத்திலும் தொடர்வது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இப்படம் பொங்கல் 2027 வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மட்டுமின்றி இந்தி திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என பல்வேறு தளங்களிலும் தனது இசை பயணத்தை விரிவுபடுத்தி வருகிறார் சாம் சி.எஸ். ‘கைதி’, ‘வணங்கான்’ உள்ளிட்ட படங்களில் பின்னணி இசை மூலம் கதையின் உணர்வுகளையும் தீவிரத்தையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தவர், காதல் மெலடிகளிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

By admin