• Fri. Nov 20th, 2026

24×7 Live News

Apdin News

கோவையில் அருந்ததியர் மக்கள் மயானத்திற்காக போராடுவது ஏன்? பிபிசி களஆய்வு

Byadmin

Nov 20, 2026


மயானத்திற்காக போராடும் மக்கள்.
படக்குறிப்பு, மயானத்திற்காக போராடும் மக்கள்.

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

”எனது அம்மா துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்தவர். அவர் கடந்த பிப்ரவரியில் இறந்துவிட்டார். அவரை இங்கேதான் புதைத்தோம். இப்போது அந்த இடமே தெரியாத அளவுக்கு புதர் மண்டிக்கிடக்கிறது. குப்பைகளுக்கு மத்தியில்தான் நாங்கள் எங்கள் மக்களை புதைத்து வருகிறோம். நாங்கள் அருந்ததியர் என்பதால் 84 சென்ட் மயான இடத்தில் வெறும் 10 சென்ட் இடத்துக்குள் எங்களை முடக்குகின்றனர்!”

தன்னுடைய தாயார் புதைக்கப்பட்ட இடத்தை நேரில் காண்பித்த மென்பொருள் பொறியாளரான ஸ்ரீஹரிஹரன், பிபிசியிடம் வேதனையுடன் பகிர்ந்த வார்த்தைகள் இவை.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு நகரப் பகுதியில் அமைந்துள்ள பட்டியலின மக்களுக்கான மயான இடத்தை முழுமையாக மீட்பதற்காக இந்த இளைஞர் உட்பட அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பல ஆயிரம் மக்களும் போராடி வருகின்றனர்.

இதுவரை மனுக்களை கொடுத்து வந்த அவர்கள், கடந்த நவம்பர் 18-ஆம் தேதியன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இந்த விவகாரத்தில் உண்மை நிலையை அறிவதற்காக பிபிசி தமிழ் அங்கு களஆய்வு மேற்கொண்டது. ஆனால் குறிப்பிட்ட அந்த இடத்தில் மயானம் இருப்பதற்கு 2 சமாதிகளைத் தவிர வேறு எந்த அடையாளங்களுமே இல்லை.

By admin