• Fri. Nov 20th, 2026

24×7 Live News

Apdin News

சிங்கம் 2 பட பாணியில் கொலை குற்றவாளியை கைது செய்த கேரளம் காவல்துறை

Byadmin

Nov 20, 2026


விமான நிலையத்தில் கைது:

ராகேஷ் வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, சி.பி.ஐ-இன் இன்டர்போல் பிரிவு மூலம் ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ பிறப்பிக்கப்பட்டு, அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சர்வதேச மற்றும் நாடுகடத்தல் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

குற்றவாளியை இந்தியாவுக்கு அழைத்து வரும் நடைமுறையின் ஒரு பகுதியாக, இங்கிருந்து மூன்று அதிகாரிகள் துபாய் சென்றனர். அங்கு ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ அடிப்படையில் கடந்த நான்கு மாதங்களாக காவலில் வைக்கப்பட்டிருந்த ராகேஷை அவர்கள் பொறுப்பேற்று, கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

விமான நிலையத்தில் வைத்து அவர் முறையாக கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் 2008-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி அரங்கேறியது. பா.ஜ.க. தொண்டர் சுஜித் என்பவரின் கொலையைக்கு பழிவாங்கும் நோக்கில், தணேஷை கொலை செய்யக் குற்றவாளிகள் சதி செய்ததாக காவல்துறை கூறுகிறது.

இந்த வழக்கில் மொத்தம் 11 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்; அவர்களில் முதல் ஆறு பேர் நேரடியாக கொலையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

By admin