ஏழை குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் அரசர்
அரசர் அடெடோகுன் அபோலரின் ஒரு சமூக தலைவர். விளிம்பு நிலை மாணவர்களுக்காக அவர் இலவச பள்ளிக்கூடம் ஒன்றை ஆரம்பித்து, கற்பித்து வருகிறார்.
“என்னுடைய பாரம்பரிய கடமைகளுடன் கற்பித்தல் மீதான என் ஆர்வத்தையும் இணைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்கிறார் அவர்.
அரசர் அடெடோகுன்னுக்கு அரசியல் அதிகாரம் இல்லை. அவர் பெரும்பாலும் சச்சரவுகளை தீர்ப்பது மற்றும் சடங்குகளை செய்வதில் மட்டுமே ஈடுபடுகிறார். கற்பிப்பது போன்ற அவரின் தினசரி பணிகள் மன்னருக்கு உண்டான மரியாதைக்கு கீழானதாக பார்க்கப்படுகிறது.
“முதல் முறை நான் வகுப்புக்கு சென்றபோது எனக்கு முன்பு பாடம் எடுத்தவரின் மகன் என்னிடம் வந்து, ‘கபியேசி, நீங்கள் செய்வது சரியில்லை,’ என்று கூறினார். நான் அவரை வெளியேற்றி விட்டேன். கடவுளின் மகிமையால் நான் அப்போது கற்பித்த குழந்தைகளுள் ஓரிரு மாணவர்கள் தற்போது முனைவர் பட்டப் படிப்பை முடித்துள்ளனர்.” என்கிறார் அவர்.
“கபியேசி (அரசர்), சொர்க்கத்தில் இருந்து வந்த தேவதையைப் போன்றவர். அவர் எங்களுக்கு தந்தையை போன்றவர்.” என்கிறார், முன்னாள் மாணவரான ஒடெனெயி நிமோடா.
“நைஜீரியாவில் ஆரம்ப கல்வி அதிகாரபூர்வமாக இலவசம் மற்றும் கட்டாயமானது. ஆனால், 6-11 வயதுடைய 61% குழந்தைகள் மட்டுமே ஆரம்ப பள்ளிக்கு தொடர்ந்து செல்கின்றனர்.” என்கிறது யுனிசெஃப் தரவு.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு