• Fri. May 15th, 2026

24×7 Live News

Apdin News

அட்லாண்டிக் பெருங்கடலில் விமானத்தை இறக்கியும் அனைவரும் உயிர் பிழைத்த அற்புதம்

Byadmin

May 15, 2026


அட்லாண்டிக் பெருங்கடலில் விமானத்தை இறக்கியும் அனைவரும் உயிர் பிழைத்த அற்புதம்

பட மூலாதாரம், Handout Air Force Reserve Command 920th Rescue Wing

படக்குறிப்பு, விமானத்தில் இருந்த 11 பேரும் பல மணி நேரம் உயிர் காக்கும் மிதவையில் மிதந்தனர்.

    • எழுதியவர், அனா ஃபகுய்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

பைலட் இயன் நிக்சன் தனது 25 ஆண்டுகால விமானப் பயண அனுபவத்தில், இது போன்ற ஒரு விபத்தை எதிர்கொண்டதில்லை.

இந்த விபத்தினால் அவரும் 10 பயணிகளும் அட்லாண்டிக் பெருங்கடலில் பல மணிநேரம் தத்தளிக்க நேரிட்டது.

செவ்வாய்க்கிழமை, பஹாமாஸின் இரண்டு தீவுகளுக்கு இடையே வழக்கமாக 20 நிமிடங்களில் முடிய வேண்டிய ஒரு பயணத்தின் போது, நிக்சன் அடுத்தடுத்து சிக்கல்களை எதிர்கொண்டார்.

முதலில் நேவிகேஷன் சிஸ்டம் , பிறகு ரேடியோ, பின்னர் ஒரு என்ஜின், இறுதியாக மற்றொரு என்ஜினும் செயலிழந்தது.

“சிறிது நேரம் ரேடியோ மூலம் யாரையும் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை,” என்று கூறிய நிக்சன், “நான் பஹாமாஸின் ஃப்ரீபோர்ட் மற்றும் மயாமி ரேடியோவைத் தொடர்பு கொள்ள முயன்றேன். அவர்கள் நான் சொல்வதைக் கேட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் என்னால் எந்தப் பதிலையும் பெற முடியவில்லை” என்று பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் நிக்சன் தெரிவித்தார்.

By admin