• Fri. May 15th, 2026

24×7 Live News

Apdin News

திருவள்ளூர் அருகே திருமணமான 23 நாளில் புதுப்பெண் ஓட்டம்

Byadmin

May 15, 2026


திருவள்ளூரை அடுத்த பட்டரைபெரும்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கும் திருத்தணி அடுத்த ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நிவேதா என்பவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த மாதம் 20-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி சந்திரசேகர் தனது மனைவி நிவேதாவுடன் அதே பகுதியில் வசிக்கும் உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்றார். அங்கு மனைவி நிவேதாவை விட்டுவிட்டு சந்திரசேகர் திருவள்ளூர் பஜாருக்கு சென்று இனிப்பு பொருட்களை வாங்க சென்றார். சிறிது நேரம் கழித்து சந்திரசேகர் மீண்டும் திரும்பி வந்போது மனைவி நிவேதா மாயமாகி இருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தும் நிவேதா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது. இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண் நிவேதா குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி 23 நாளில் புதுமணப்பெண் ஓட்டம் பிடித்ததால் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கவலை அடைந்து உள்ளனர்.

By admin