• Fri. May 15th, 2026

24×7 Live News

Apdin News

ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் அதிகம் சாப்பிட வேண்டிய 7 உணவுகள் எவை?

Byadmin

May 15, 2026


உணவு, ஊச்சச்சத்து, ஆரோக்கியம், உடல்நலம், தாதுக்கள், வைட்டமின்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜெசிகா பிராட்லி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

நமது அன்றாடச் சமையலில் பயன்படுத்தும் சில சாதாரணப் பொருட்கள், நமது ஆரோக்கியத்தில் மிகப்பெரிய ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். அவ்வாறு நாம் நமது உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஏழு உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

முன்பை விட இப்போது நாம் தேர்ந்தெடுத்து உண்பதற்குப் ஏராளமான உணவு வகைகள் உள்ளன. இருப்பினும், ஒவ்வொரு நாளும் எந்த ஊட்டச்சத்துகளுக்கு முன்னுரிமை அளிப்பது? புரதச்சத்தா, நார்ச்சத்தா அல்லது வைட்டமின் சி-யா? என்பதை அறிவது சில நேரங்களில் கடினமாக இருக்கலாம்

இதை எளிதாக்குவதற்காக, ஆராய்ச்சியாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூல உணவுகளை ஆய்வு செய்து, அன்றாட ஊட்டச்சத்துத் தேவைகளைச் சீராக வழங்கக்கூடிய சிறந்த உணவுகளைப் வரிசைப்படுத்தியுள்ளனர்.

அவற்றில் முக்கியமான ஏழு உணவுகள் மற்றும் அவற்றை ஏன் உங்கள் அடுத்த மளிகைப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதற்கான உண்மையை தெரிந்துக் கொள்ளுங்கள்.

பாதாம்

இந்தக் கொட்டை வகையில் ‘மோனோஅன்சாச்சுரேட்டட்’ கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ அதிகளவில் உள்ளன. இதைத் தொடர்ந்து உட்கொள்வது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, கெட்டக் கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

By admin