• Thu. Jun 4th, 2026

24×7 Live News

Apdin News

அதிகமாக பகல் கனவு காண்கிறீர்களா? ஆபத்தான கட்டத்தை அடைந்துவிட்டீர்களா என்பதை அறியும் அறிகுறிகள்

Byadmin

Jun 4, 2026


பல மணிநேரம் பகற்கனவு காண்கிறீர்களா? உளவியல் சிகிச்சை எப்போது தேவைப்படும்?

பட மூலாதாரம், Serenity Strull/ BBC/ Getty Images

சிலர் பகல் கனவு காண்பதிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். அவர்கள் தங்கள் மனதில் மணிக்கணக்கில் கதைகளைக் கற்பனை செய்து பார்ப்பதுடன், அதே கதையைப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வளர்த்தெடுத்தும் வருகிறார்கள்.

சிலருக்கு, இது மிகவும் மன உளைச்சலைத் தருவதாகவும், கட்டுப்படுத்தக் கடினமானதாகவும் மாறிவிடக்கூடும். சாதாரண பகல் கனவு எப்போது ஒரு தீவிரமான பிரச்னையாக மாறுகிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும் சில அறிகுறிகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவை சேர்ந்த உளவியல் மருத்துவரும் ஆய்வாளருமான காலின் ராஸ் இதுகுறித்துப் பேசியபோது, “ஓர் எழுத்தாளர் தனக்கு மிகவும் தெளிவான, நிஜம் போன்ற பகற்கனவுகள் வருவதாக விவரித்தார். இந்தக் கற்பனைக் கதைகள் மிகவும் உண்மையாக இருப்பதைப் போன்ற உணர்வைத் தருவதால், அவை அந்த எழுத்தாளரை அழவோ அல்லது சத்தமாகச் சிரிக்கவோ வைத்து விடுகின்றன.

இருப்பினும், அந்த எழுத்தாளர் தனக்கு விருப்பமான நேரத்தில் இந்தப் பகற்கனவுகளுக்குள் நுழையவும், அதிலிருந்து வெளியேறவும் முடிவதாகவும், அந்த அனுபவத்தைத் தான் மிகவும் ரசிப்பதாகவும் அவர் கூறினார்” என்று விளக்கினார்.

இதைக் கேட்ட ராஸ், இந்தத் திறமையானது ஒரு வியக்கத்தக்க ‘கலைசார்ந்த வரப்பிரசாதம்’ என்று அந்த எழுத்தாளரிடம் கூறியுள்ளார்.

By admin