• Sat. Aug 8th, 2026

24×7 Live News

Apdin News

அதிக அளவில் சீனி சேர்ப்பு: உடன்குடி கருப்பட்டி வியாபாரிகள் 5 பேருக்கு ரூ.38 கோடி அபராதம்..!

Byadmin

Aug 8, 2026


ஜி.எஸ்.டி. மோசடி

இதில், உடன்குடி பகுதியில் கடந்த சில வாரங்களில் ரூ.5 கோடிக்கு சீனி மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்ததும், பதநீரில் சீனி கலந்து கருப்பட்டி தயாரித்து, அதனை அசல் கருப்பட்டி என்று கூறி ரூ.6 கோடி வரை விற்று மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மேலும் சீனி கலந்து தயாரித்த கருப்பட்டிகளை அசல் கருப்பட்டி என்று கூறி கடைகளில் விற்றதால் 5 சதவீத ஜி.எஸ்.டி. மட்டுமே விதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள், பதநீரில் 60 முதல் 70 சதவீதம் வரையிலும் சீனி கலந்து கருப்பட்டி தயாரித்து விற்றுள்ளனர். இதன் மூலம் சீனி கலந்து தயாரிக்கப்பட்ட கருப்பட்டிக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படாமல், 5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்பட்டு உள்ளது.

By admin