• Sat. Aug 8th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவுடன் மோதல் ஏற்பட்டால் பாகிஸ்தானுக்கு சௌதி, துருக்கி உதவுமா? மெக்கா ஒப்பந்தம் ஓர் அலசல்

Byadmin

Aug 8, 2026


மெக்கா ஒப்பந்தம், பாகிஸ்தான் - சௌதி - துருக்கி முத்தரப்பு ராணுவ ஒப்பந்தம், இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம், SPA

படக்குறிப்பு, சௌதி பட்டத்து இளவரசர், துருக்கி அதிபர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஆகியோர் மெக்காவில் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

சௌதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வெள்ளிக்கிழமை சௌதி அரேபியாவின் மெக்காவில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல், மூன்று நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும்.

பனிப்போர் காலத்தில் உருவாக்கப்பட்ட ராணுவக் கூட்டணிகளான மத்திய ஒப்பந்த அமைப்பு (Central Treaty Organization) மற்றும் தெற்காசிய ஒப்பந்த அமைப்பில் (outh Asia Treaty Organization) பாகிஸ்தான் இணைந்து எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது புதிய ராணுவக் கூட்டணியில் இணைகிறது என்று தி புரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷன் சிந்தனைக் குழுவின் மூத்த ஆய்வாளரான தன்வி மதன் கூறுகிறார்.

இதுகுறித்து தன்வி மதன் எழுதுகையில், “சீட்டோ ஒப்பந்தத்தின் 4-வது பிரிவு பரஸ்பர பாதுகாப்பை வழங்கியது. எனினும், அமெரிக்கா அதற்கு சில நிபந்தனைகளை விதித்திருந்தது. உதாரணமாக, இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டால், அதில் தலையிடாமல் இருப்பதற்கான வாய்ப்பு அமெரிக்காவுக்கு இருந்தது. இதற்கிடையில், வியட்நாம் போரில் பங்களிக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கைகளை பாகிஸ்தான் நிராகரித்தது” என்று குறிப்பிடுகிறார்.

இத்தகைய சூழலில், இந்தியாவுடன் மோதல் ஏற்பட்டால் துருக்கியும் சௌதி அரேபியாவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்குமா என்ற கேள்வி எழுகிறது.

By admin