• Sat. Aug 8th, 2026

24×7 Live News

Apdin News

திப்பு சுல்தான்: மத நல்லிணக்கம் போற்றியும் மத வெறியர் என்ற முத்திரை விழுந்த கதை

Byadmin

Aug 8, 2026


திப்பு சுல்தான், ஹைதர் அலி, ஆங்கிலேயர்கள், வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திப்பு சுல்தான்

வங்காளத்திலும், பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிரான போர்களிலும், வெற்றி பெற்றிருந்த ஆங்கிலேயர், ஹைதர் அலியிடமும் பின்னர் திப்பு சுல்தானிடமும் (1767-1799) கடும் சவாலைச் சந்திக்க வேண்டியிருந்தது.

ஹைதரும் திப்புவும் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு சவால் கொடுக்கும் வல்லமை பெற்றிருந்தாலும் அவர்களது மேலாண்மை தென் இந்தியாவில் மட்டுமே இருந்ததால், அப்பலவீனத்தை உணர்ந்து கூட்டு முயற்சியாக மராத்தியர், ஐதராபாத் நிஜாம் இரண்டாம் ஆசப் ஷா, ஆவாத்தின் நவாப் சூஜா-உத்-தவுலா ஆகியோருடன் இணைந்து ஆங்கிலேயரை எதிர்கொள்ள எண்ணினர்.

ஆனால் பெருகிவந்த ஹைதர் அலியின் செல்வாக்கைக் கண்டு அஞ்சிய ஆசப் ஷாவும், சூஜா-உத்-தவுலாவும் ஹைதர் அலிக்கு முழு மனதுடன் ஒத்துழைக்க மறுத்தனர். அவமானத்துக்குள்ளாகிய போதும் மராத்தியர்களும் ராஜபுத்திரர்களும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள ஆங்கிலேயருக்கு ஒத்துழைத்து ஏமாந்தனர்.

மாறாக, எந்தக் கட்டத்திலும் ஆங்கிலேயருடன் இணைந்து இந்திய அரசர்களுக்கு எதிராகப் போரிடுவதில்லை என உறுதியேற்றிருந்த ஹைதரும் திப்புவும் இறுதிவரை அந்நியரான ஆங்கிலேயருடன் போரிட்டு தாய் நாட்டுக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்து வரலாற்றில் நிரந்தர இடம் பெற்றனர்.

திப்பு ஒரு கொடுங்கோலன், மத வெறியன் என 1784-ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயர்களால் சித்தரிக்கப்படவில்லை.

By admin