• Tue. May 26th, 2026

24×7 Live News

Apdin News

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா – தவெகவின் அரசியல் கணக்கு பலன் அளிக்குமா?

Byadmin

May 26, 2026


3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா - தவெகவின் அரசியல் கணக்கு பலன் அளிக்குமா?

பட மூலாதாரம், ANI

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

சட்டப்பேரவை விதிகளின்படி அனைத்தும் முறையாக இருப்பதால் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மூவரின் ராஜிநாமா கடிதம் ஏற்கப்பட்டுவிட்டதாக, தமிழ்நாடுசட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் மே 25 ஆம் தேதியன்று அறிவித்துள்ளார்.

“தொகுதிக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் த.வெ.க ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தோம்” என்கிறார், மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல்.

“பேரவையில் பலத்தை பெறும் நோக்கில் த.வெ.க ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் அதுவும் சராசரி கட்சி என்பது நிரூபணம் ஆகிவிட்டது” என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற மூன்று பேர் ராஜிநாமா செய்வது ஏன்? பின்னணியில் என்ன நடக்கிறது?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் த.வெ.க வெற்றி பெற்றாலும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை அக்கட்சி பெறவில்லை.

By admin