0
‘யதார்த்த நாயகன்’ விதார்த் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘ சின்னதா ஒரு படம்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘இவள் ‘ எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரும் , பாடகருமான அனிருத் வெளியிட்டிருக்கிறார்.
இயக்குநர் ஜானி டிசோசா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சின்னதா ஒரு படம் ‘ எனும் திரைப்படத்தில் விதார்த் ,பூஜா தேவா, பிரசன்னா, குரு சோமசுந்தரம் , ரோகிணி , லட்சுமி பிரியா சந்திர மௌலி, ஜெயந்த், வெங்கடேஷ் ஹரி நாதன், பேபி நட்சத்திரா, பால சரவணன் , ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் இவர்களுடன் ஆர். கே. சுரேஷ் மற்றும் சந்தானம் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஆர். ஏ. ரத்ன குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹரிஷ் வெங்கட் மற்றும் பிரசாந்த் டெக்னோ ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். ஆந்தாலஜி பாணியில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை திருச்சித்ரம் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டொக்டர் எம். திருநாவுக்கரசு தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை எம் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஏ வி பி மாறன் மற்றும் கணேஷ் கே. பாபு ஆகியோர் வழங்குகிறார்கள்.
இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ இவள்- மனதினில் நடை பழகிடும் பாவை ‘ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர்கள் ஜானி- ஹரிஷ் வெங்கட் ஆகியோர் இணைந்து எழுத, பின்னணி பாடகர் பிரதீப் குமார் பாடியிருக்கிறார்.
எம்முடைய வாழ்வில் இடம்பெறும் அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பணம் என தெரிவிக்கப்பட்டு, ஒவ்வொரு பெண்களின் துணிச்சலை மையப்படுத்திய இப்படத்தின் கதையும் பாடல்களும் இடம்பிடித்திருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.