• Sun. Jul 27th, 2025

24×7 Live News

Apdin News

அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் ஒரேமாதிரி மின்கட்டணமே நிர்ணயம்: தமிழக அரசு விளக்கம் | Same electricity tariff for all worship places tn government explains

Byadmin

Jul 27, 2025


சென்னை: தமிழகத்தில் கோயில், மசூதி, தேவாலயம் என பொது வழிபாட்டு தலங்கள் அனைத்துக்கும் ஒரேமாதிரி மின் கட்டணமே நிர்ணயம் செய்யப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மத வழிபாட்டு தலங்களுக்கு விதிக்கப்படும் மின் கட்டணத்தில் தமிழக அரசு பாகுபாடு காட்டுவதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு சாதாரண குடிமகனுக்கு ரூ.7.85, கோயிலுக்கு ரூ.7.85, கோசாலை பசு மடத்துக்கு ரூ.7.85, மசூதிக்கு ரூ.1.85, சர்ச்சுக்கு ரூ.1.85 என்று அதில் தெரிவித்திருந்தார். பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மத வழிபாட்டு தலங்களின் மின் கட்டணத்தில் பாகுபாடு என்று கடந்த 2019-ம் ஆண்டில் இருந்தே தகவல் பரப்பப்படுகிறது. இது வதந்தி. தமிழகத்தில் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என அனைத்தும் ‘பொது வழிபாட்டு தலங்கள்’ என்றே வகைப்படுத்தப்படுகின்றன. இவை அனைத்துக்கும் ஒரேமாதிரி மின் கட்டணமே நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடந்த 2024-ம் ஆண்டு கட்டண விதிப்பின்படி, கோயில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட பொது வழிபாட்டு தலங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.6.20 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், முதல் 120 யூனிட்டுக்கு அரசு மானியமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.3.13 அளிக்கப்படுகிறது. எனவே, வதந்தியை பரப்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



content_bottom">

By admin