• Thu. Oct 15th, 2026

24×7 Live News

Apdin News

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்து: சவூதி அரசாங்கத்துக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

Byadmin

Oct 15, 2026


அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து செய்யப்பட்ட முடிவை நான் வரவேற்கிறேன். சவூதி அரசாங்கத்துக்கு மனமார்ந்த நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன். மீதமுள்ள சட்ட நடைமுறைகள் நிறைவடையும் வரை அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து ஆதரவையும் எனது அரசாங்கம் தொடர்ந்து வழங்கும். வாழ்வாதாரத்தைத் தேடி நமது நாட்டை விட்டுச் செல்லும் எந்தவொரு இலங்கையரும், தாங்கள் தனித்து நிற்பதாக ஒருபோதும் உணரக் கூடாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்துச் செய்து சவூதி உயர்நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பை வரவேற்று ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இது அனோஜனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அவரது வழக்கினை மிகுந்த கவலையுடன் பின்பற்றி வந்த அனைத்து இலங்கையர்களுக்கும் அளப்பரிய நிம்மதியைத் தருகிறது. இது பொறுமையான இராஜதந்திரத்தின் பெறுமதி, ஒரு நட்பு நாட்டின் சட்ட நடைமுறைகளுக்கான மரியாதை மற்றும் வெளிநாட்டில் வாழும் ஒரு இலங்கைச் பிரஜைக்காக உறுதுணையாக நின்றவர்களின் சளையாத உழைப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.

இந்த முடிவிற்காக சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய பல சவூதி அரேபிய மற்றும் இலங்கை இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள் மற்றும் சட்டக் குழுவினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீதமுள்ள சட்ட நடைமுறைகள் நிறைவடையும் வரை அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து ஆதரவையும் எனது அரசாங்கம் தொடர்ந்து வழங்கும். வாழ்வாதாரத்தைத் தேடி நமது நாட்டை விட்டுச் செல்லும் எந்தவொரு இலங்கையரும், தாங்கள் தனித்து நிற்பதாக ஒருபோதும் உணரக் கூடாது.

By admin