• Fri. Sep 4th, 2026

24×7 Live News

Apdin News

அபிநந்தன் தனியார் விமான நிறுவனத்தில் விமானியானார்: 2019-ல் பாகிஸ்தானில் பிடிபட்டபோது என்ன நடந்தது?

Byadmin

Sep 4, 2026


அபிநந்தன் எப்படி விடுவிக்கப்பட்டார்?

பட மூலாதாரம், ANI

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பிபிசிக்கு கிடைத்த தகவலின்படி, இந்திய விமானப்படையின் ஓய்வுபெற்ற குரூப் கேப்டன் அபிநந்தன் வர்தமான், தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

2019-ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை பாலகோட்டில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அந்தச் சமயத்தில்தான் அபிநந்தன் வர்தமான் உலகளவில் கவனம் பெற்றார்.

இந்திய விமானப்படையின் கூற்றுப்படி, பாகிஸ்தான் விமானப்படையின் எஃப்-16 போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய பின்னர், அபிநந்தன் வர்தமான் சென்ற மிக்-21 போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதையடுத்து, அவர் மூன்று நாட்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் இருந்தார்.

2021-ஆம் ஆண்டு, வீர் சக்ரா விருது அபிநந்தனுக்கு வழங்கப்பட்டது.

இந்த விருதுக்கான அதிகாரப்பூர்வ பாராட்டுச் சான்றில், வான்வழிப் போரின்போது அவர் “கடமையில் அசாதாரண அர்ப்பணிப்பு உணர்வை” வெளிப்படுத்தியதற்காக கௌரவிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

By admin