• Fri. Sep 4th, 2026

24×7 Live News

Apdin News

இசக்கி சுப்பையா தவெகவில் இணைந்த பிறகும் அதிமுக சார்பில் வென்ற எம்எல்ஏ பதவியை கேட்பது ஏன்?

Byadmin

Sep 4, 2026


6 எம்எல்ஏக்கள் ராஜிநாமா; இசக்கி சுப்பையா மட்டும் வாபஸ் பெற மனு செய்ததன் பின்னணி என்ன?

பட மூலாதாரம், Facebook/Esaki subaya

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

அம்பாசமுத்திரம் தொகுதி உட்பட 6 தொகுதிகள் காலியாக இருப்பதாக தெரிவித்த சட்டப்பேரவை அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டுமென்ற அதிமுக சார்பில் தாக்கலான வழக்கு முடியும்வரை, தனது ராஜிநாமா கடிதத்தை நிறுத்தி வைத்து, சட்டப்பேரவை உறுப்பினராக பணியில் தொடர அனுமதிக்க வேண்டுமென்று இசக்கி சுப்பையா தாக்கல் செய்த மனு, நீதிமன்றத்தாலும் சட்டப்பேரவையாலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தகுதி நீக்க மனு நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போது, அங்கு இடைத்தேர்தல் நடத்துவது நீதிமன்ற மறு ஆய்வை முடக்கி, சரி செய்யமுடியாத நிலையை உருவாக்குமென்று அதிமுக வாதிட்டு வரும் நிலையில், இந்த வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு பலனும் இருக்காது என்று தெரிந்தே இந்த மனுவை அவர் அரசியலுக்காக தாக்கல் செய்ததாக முன்னாள் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, வழக்கறிஞர் தமிழ்மணி ஆகியோர் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆனால் ராஜிநாமா செய்துவிட்ட நிலையில், இடைத்தேர்தலும் தள்ளிப் போவதால் தொகுதி மக்களின் நலனுக்காக இந்த மனுவை தாக்கல் செய்ததாக பிபிசியிடம் கூறினார் இசக்கி சுப்பையா.

வாபஸ் பெற மனு!

மரகதம் குமரவேல், ஜெயக்குமார் மற்றும் சத்யபாமா ஆகியோர் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து ராஜிநாமா கடிதத்தை வழங்கியபோது எடுக்கப்பட்ட படம்
படக்குறிப்பு, மரகதம் குமரவேல், ஜெயக்குமார் மற்றும் சத்யபாமா ஆகியோர் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து ராஜிநாமா கடிதத்தை வழங்கியபோது எடுக்கப்பட்ட படம்

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 6 சட்டப்பேரவை உறுப்பினர்கள், ராஜிநாமா செய்து விட்டு, ஆளும்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அவர்களின் ராஜிநாமா கடிதங்களை ஏற்றுக் கொள்வதாக சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார். அதேசமயம் 6 தொகுதிகள் காலியாக இருப்பதாக சட்டப்பேரவையாலும் அறிவிக்கப்பட்டது.

By admin