• Sat. May 30th, 2026

24×7 Live News

Apdin News

அப்துல் ரஹீம்: சௌதியில் ரூ.34 கோடி குருதிப் பணம் கொடுத்து இந்தியர் மீண்டு வந்த கதை

Byadmin

May 30, 2026


சௌதி அரேபியா, அப்துல் ரஹீம், கேரளா, குருதிப் பணம்

சௌதி அரேபியாவில் கொலை வழக்கில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள கார் ஓட்டுநர் அப்துல் ரஹீம் 20 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு தாயகம் திரும்பியிருக்கிறார். குருதி பணமாக ரூ.34 கோடி திரட்டிக் கொடுக்கப்பட்டதன் மூலம் மரண தண்டனையில் இருந்து அவர் விடுபட்டார்.

46 வயதான அப்துல் ரஹீம், கடந்த வியாழக்கிழமை அதிகாலை சௌதி தலைநகர் ரியாத்திலிருந்து புறப்பட்டு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் குடும்பத்தினர், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் உணர்ச்சிபூர்வமாக அவரை வரவேற்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய அப்துல் ரஹீம், “ஒரு கட்டத்தில் நான் உயிருடன் வெளியே வருவேன் என்று கூட நம்பவில்லை. என்னைக் காப்பாற்ற பிரார்த்தித்தவர்களுக்கும், உதவி செய்த அனைவருக்கும் நன்றி சொல்லி இதனை முடிக்க முடியாது,” என்று உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார்.

யார் இந்த அப்துல் ரஹீம் ?

சௌதி அரேபியா, அப்துல் ரஹீம், கேரளா, குருதிப் பணம்

பட மூலாதாரம், Photo Credit: Naseer

படக்குறிப்பு, அப்துல் ரஹீம்

கோழிக்கோடு மாவட்டம் ஃபெரோக் அருகே உள்ள கொடம்புழா பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹீம், 2000களின் தொடக்கத்தில் வேலைக்காக சௌதி அரேபியா சென்றுள்ளார். அப்போது அவரது குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.

By admin