• Sat. May 30th, 2026

24×7 Live News

Apdin News

சபரிமலை வழக்கு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு இஸ்லாமிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக்கூடும்? ஓர் அலசல்

Byadmin

May 30, 2026


சபரிமலை, உச்ச நீதிமன்றம், மேல்முறையீடு

பட மூலாதாரம், R. SATISH BABU/AFP via Getty Images

படக்குறிப்பு, 2018-இல் அனைத்து வயதுக்கு உள்பட்ட பெண்களும் சபரிமலை கோவிலுக்குச் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அடுத்த தீர்ப்பு வரும் வரை இது அமலில் இருக்கும்.

இந்த ஆண்டு மே 14-ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அமர்வு மிகவும் முக்கியமான வழக்கு ஒன்றில் தனது தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

இந்த முடிவு இந்தியாவில் மக்கள் எவ்வாறு தங்களின் மதங்களைப் பின்பற்றலாம் என்பதில் தாக்கம் செலுத்தும் என நம்பப்படுகிறது.

2018-ஆம் ஆண்டு கேரளத்தில் உள்ள சபரிமலை கோவில் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது.

அந்த தீர்ப்பின்படி 10 முதல் 50 வயதுக்கு உள்பட்ட பெண்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டது. தற்போதைய வழக்கும் இந்த தீர்ப்புடன் தொடர்புடையது தான்.

சபரிமலை தலைமை அர்ச்சகர், பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் உள்பட 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டன.

By admin