பட மூலாதாரம், Reuters
-
- எழுதியவர், ஸ்டுவர்ட் லாவ்
- பதவி, பிபிசி நியூஸ்
லேன்செட் மருத்துவ இதழில் திங்கட்கிழமை வெளியான ஆய்வின்படி வெளிநாடுகளுக்கு செய்யப்படும் மனிதாபிமான உதவிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்யும் டொனால்ட் டிரம்பின் முடிவு உலகம் முழுவதும் 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடியே 40 லட்சம் கூடுதல் இறப்புகளை ஏற்படுத்தக் கூடும்.
உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் குழந்தைகள் என ஆய்வு கண்டுபிடித்துள்ளது.
சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகமையான யுஎஸ்ஏஐடி(USAID) மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் 80 விழுக்காட்டுக்கு மேலான திட்டங்களை அதிபர் டிரம்பின் நிர்வாகம் ரத்து செய்துவிட்டதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ மார்ச் மாதம் தெரிவித்தார்.
“இதன் விளைவாக ஏற்படும் அதிர்ச்சி, பல சிறு மற்றும் மத்திய வருவாய் நாடுகளுக்கு ஒரு சர்வதேச அளவிலான தொற்று நோய் அல்லது பெரிய போருக்கு இணையானதாக இருக்கும்,” என இந்த லேன்செட் அறிக்கையின் இணை ஆசிரியரான டேவிட் ரசெல்லா தெரிவித்தார்.