• Sun. Jul 27th, 2025

24×7 Live News

Apdin News

அமெரிக்காவின் யூடியூபர் மீது பிரான்ஸ் ஜனாதிபதியும் மனைவியும் அவதூறு வழக்கு!

Byadmin

Jul 25, 2025


அமெரிக்காவின் பிரபல யூடியூபர் கேண்டஸ் ஓவன்ஸ் மீது, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் அவருடைய மனைவி பிரிஜட் ஆகியோர் அவதூறு வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.

திருமதி பிரிஜட் ஆணாகப் பிறந்தவர் என்ற பொய்க் கூற்றை ஓவன்ஸ் பரப்பியதால் அவர் மீது இவ்வாறு அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

8 பாகங்கள் கொண்ட “Becoming Brigitte” எனும் காணொளி நிகழ்ச்சியை ஓவன்ஸ் தயாரித்தார்.

அதில் அவர் திருமதி பிரிஜட்டுக்கு எதிராகப் பொய்த் தகவல்களைக் கூறியிருந்தார்.

பலமுறை எச்சரித்த பிறகும் ஓவன்ஸ் அவருடைய கருத்தை மாற்றிக்கொள்ளாததால் சட்ட நடவடிக்கை அவசியமானதாக மக்ரோன் தம்பதியின் வழக்கறிஞர் கூறினார்.

இதற்கு முன்னர் திருமதி பிரிஜட் பிரான்ஸில் இரு பெண்கள் மீது அவதூறு வழக்குத் தொடுத்தார்.

அந்தப் பெண்களும் அதே கூற்றைப் பரப்பினர். அவ்விரு பெண்களும் அவதூறைப் பரப்பியதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.

அந்தத் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து திருமதி பிரிஜட் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்.

The post அமெரிக்காவின் யூடியூபர் மீது பிரான்ஸ் ஜனாதிபதியும் மனைவியும் அவதூறு வழக்கு! appeared first on Vanakkam London.

By admin