• Mon. Sep 7th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்காவின் 9/11 விமானக் கடத்தல்காரர்கள் தங்கிய வீடு – செளதி உளவாளி எனக் குற்றம்சாட்டப்படும் நபரின் தொடர்பை வெளிப்படுத்தும் பெண்

Byadmin

Sep 7, 2026


ஹோலி ராட்ச்ஃபோர்ட் முதன்முறையாகப் பகிரங்கமாகப் பேச முடிவு செய்துள்ளார்.
படக்குறிப்பு, ஹோலி ராட்ச்ஃபோர்ட் முதன்முறையாகப் பகிரங்கமாகப் பேச முடிவு செய்துள்ளார்.

    • எழுதியவர், ஜேன் மெக்முல்லென்
    • பதவி, பிபிசி பனோரமா & பிபிசி ரேடியோ 4
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 11 நிமிடங்கள்

ஹோலி ராட்ச்ஃபோர்டால் இன்னமும் நம்ப முடியவில்லை, தாம் நிர்வகித்து வந்த குடியிருப்பு வளாகத்துக்கு குடியேறிய அந்த நபர், பின்னர் அமெரிக்காவின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் இருண்ட நாளில் நடந்த சம்பவத்தில் பங்கேற்றதாகக் குற்றம்சாட்டப்படுவார் என்று.

“அவர் தன்னைப் பற்றி கூறியது என்ன, அவர் உண்மையில் யார் என்பது என்ன என்பதை என்னால் இன்னும் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இதை ஏற்றுக்கொள்வது எனக்கு இப்போதும் கடினமாக இருக்கிறது” என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார்.

அந்த நபர் ஓமர் அல்-பயூமி. அப்போது சுமார் 40 வயதான சௌதி அரேபியரான அவர், 1999-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தனது குடும்பத்துடன் கலிஃபோர்னியாவின் சான் டியாகோவில் உள்ள அந்தக் குடியிருப்பு வளாகத்துக்குக் குடியேறினார்.

பார்க்வுட் குடியிருப்பு வளாகத்தில் 152-வது வீட்டுக்குப் புதிதாக குடியேறிய அவர், ராட்ச்ஃபோர்ட் நடத்தி வந்த நீச்சல் குள விருந்துகளில் தொடர்ந்து கலந்துகொள்ளத் தொடங்கினார்.

“அவர் எப்போதும் மிகவும் உற்சாகமாகவும் புன்னகையுடனும் இருப்பார். மிகவும் நட்பாகப் பழகுவார்” என்று அவர் நினைவுகூர்கிறார்

By admin