• Sat. Sep 21st, 2024

24×7 Live News

Apdin News

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்பை தாக்க மீண்டும் முயற்சியா? சந்தேக நபர் பிடிபட்டார்

Byadmin

Sep 16, 2024


அமெரிக்கா, டிரம்பை கொல்ல முயற்சி

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, டிரம்ப்

  • எழுதியவர், மெடலின் ஹால்பெர்ட் மற்றும் லாரன்ஸ் பீட்டர்
  • பதவி, பிபிசி நியூஸ்

அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், தற்போதைய அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதல் நடத்த மீண்டும் முயற்சி நடந்துள்ளது. புளோரிடாவில் உள்ள அவரது கோல்ப் மைதானத்தில் நடந்த தாக்குதல் முயற்சியில் இருந்து தப்பி அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

புதரில் மறைந்திருந்தபடி டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அமெரிக்க ரகசிய சேவைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நேரத்தில் டிரம்ப் சுமார் 275 முதல் 455 மீட்டர் தொலைவில் இருந்ததாக எஃப்.பி.ஐ. கூறுகிறது.

ஏகே-47 துப்பாக்கி, ஸ்கோப், கோ-புரோ கேமரா மற்றும் 2 பைகள் அந்த இடத்தில் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டன.

அமெரிக்கா, டிரம்பை கொல்ல முயற்சி
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நேரில் கண்ட சாட்சி கூறியது என்ன?

ரகசிய சேவை ஏஜெண்டுகள் தன்னை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால், சந்தேகத்திற்குரிய அந்த நபர் புதரை விட்டு ஓடி, கருப்பு நிற நிசான் காரில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டதாக அதனை நேரில் பார்த்த சாட்சி கூறியுள்ளார். அத்துடன், கார் மற்றும் அதன் நம்பர் பிளேட்டை அவர் புகைப்படமும் எடுத்துள்ளார். பின்னர் அந்த கார் மார்ட்டின் கவுண்டியில் தடுத்து நிறுத்தப்பட்டது.

By admin