• Sun. Jul 6th, 2025

24×7 Live News

Apdin News

அமெரிக்காவில் திடீர் வெள்ளம்: 24 பேர் பலி, கிறிஸ்தவ முகாமில் இருந்த சிறுமிகளை காணவில்லை

Byadmin

Jul 6, 2025


காணொளிக் குறிப்பு,

அமெரிக்காவில் திடீர் வெள்ளம்: 24 பேர் பலி, கிறிஸ்தவ முகாமில் இருந்த சிறுமிகளை காணவில்லை

அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர், ஒரு கிறிஸ்தவ கோடைக்கால முகாமில் இருந்த பல சிறுமிகளை காணவில்லை.

அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும் பயங்கரமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குவாடலூப் ஆற்றில் திடீரென ஒரு மணி நேரத்திற்குள் 26 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து வெள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

சான் அன்டோனியோவின் வடமேற்கே உள்ள கெர்வில்லேவில் கேம்ப் மிஸ்டிக் எனப்படும் கிறிஸ்தவ கோடைக்கால முகாமுக்கு சென்ற சிறுமிகளில் 23 முதல் 25 சிறுமிகளை காணவில்லை என உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

அவர்களை மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பல கவுண்டிகளில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன, தொலைபேசிகள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin