• Wed. Jul 1st, 2026

24×7 Live News

Apdin News

‘அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை’ – டிரம்புக்கு பின்னடைவாக அமைந்த தீர்ப்பில் நீதிமன்றம் கூறியது என்ன?

Byadmin

Jul 1, 2026


டிரம்பிற்குப் பின்னடைவு - பிறப்புரிமைக் குடியுரிமையை உறுதி செய்தது அமெரிக்க உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், AFP via Getty Images

    • எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மேன் ஜூனியர், வெள்ளை மாளிகை செய்தியாளர் & கெய்லா எப்ஸ்டீன்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்குக் குடியுரிமை பெற அரசியலமைப்பு ரீதியான உரிமை உள்ளது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் 150 ஆண்டுகள் பழமையான இக்கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டொனால்ட் டிரம்ப்பின் முயற்சியை நிராகரித்துள்ளது.

6-3 என்ற விகிதத்திலான முடிவில், தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், அமெரிக்காவில் “சட்டவிரோதமாக அல்லது தற்காலிகமாக தங்கியிருக்கும் பெற்றோர்களுக்கு” பிறக்கும் குழந்தைகள், 14-வது திருத்தத்தின் கீழ் “பிறப்பிலேயே குடிமக்கள்தான்” என்று தீர்ப்பளித்தார்.

அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவின் மூலம் இந்த உரிமையைக் கட்டுப்படுத்த முயன்றார், ஆவணமற்ற குடியேறியவர்கள் மற்றும் சில தற்காலிகப் பயணிகளின் குழந்தைகள் “அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்டவர்கள்” அல்ல, எனவே அவர்கள் பிறப்புரிமைக் குடியுரிமைக்குத் தகுதியற்றவர்கள் என்று வாதிட்டார்.

இந்தத் தீர்ப்பு டொனால்ட் டிரம்ப்பின் குடியேற்றம் தொடர்பான திட்டத்திற்கு ஒரு பெரிய பின்னடைவாகும். இது சிவில் உரிமைக் குழுக்களால் வரவேற்கப்பட்டுள்ளது.

ட்ரூத் சோஷியலில், நீதிமன்றத்தின் முடிவு “மிகவும் மோசமானது” என்று டொனால்ட் டிரம்ப் கூறினார், மேலும் சட்டத்தின் மூலம் பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவரத் தொடர்ந்து போராடப் போவதாக கூறினார்.

By admin