• Sat. Sep 19th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்காவுக்கு கிரீன்லாந்தில் ‘தன்னிச்சையான அதிகாரத்தை’ கொடுக்கும் புதிய ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது?

Byadmin

Sep 19, 2026


கிரீன்லாந்து தொடர்பாக புதிய ஒப்பந்தத்தை அறிவித்த அமெரிக்கா - டென்மார்க்

பட மூலாதாரம், Anna Moneymaker/Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (கோப்புப் படம்)

    • எழுதியவர், ஆலிவர் ஓ’கானெல்
    • பதவி,

    • எழுதியவர், மேக்ஸ் மட்ஸா
    • பதவி,
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கிரீன்லாந்தை கைப்பற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அச்சுறுத்தல்களால் உருவான ராஜதந்திர மோதலுக்குத் தீர்வு காணும் வகையில், கிரீன்லாந்தின் பாதுகாப்பு குறித்த ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்காவும் டென்மார்க்கும் அறிவித்துள்ளன.

இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு “பாதுகாப்பு மற்றும் அனைத்துத் தேவைகள் மீதும் நிரந்தரக் கட்டுப்பாட்டை” வழங்கும் என்று டிரம்ப் கூறினார்.

இந்த ஒப்பந்தம் “ஆர்டிக் மற்றும் வட அட்லான்டிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது” என்று டென்மார்க் பிரதமர் கூறினார்.

ஆனால் டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்ட ஒப்பந்தத்தின் விவரங்கள் குறித்து டென்மார்க் பிரதமர் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காகவும், பாதுகாப்பு தேவைக்கான கிரீன்லாந்தின் ராஜாங்க அமைவிடம் மற்றும் அதன் கனிம வளங்களைக் சுட்டிக்காட்டியும், அப்பகுதியைக் “கைப்பற்றப் போவதாக” டிரம்ப் பல மாதங்களாக அச்சுறுத்தி வந்த நிலையில் இந்த ஒப்பந்தம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

By admin