• Sat. Sep 19th, 2026

24×7 Live News

Apdin News

சண்டக்காரி – திரைவிமர்சனம்

Byadmin

Sep 19, 2026


கதை

லண்டனில் மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றும் ஸ்ரேயா சரியான சண்டக்காரி! மறுபுறம் பெரிய லட்சியங்களுடன் இருக்கும் விமல், அவரிடம் அசிஸ்டென்ட்டாக வேலைக்கு சேர்கிறார். ஆனால் அந்த வேலையில் சேர்ந்து தாக்குப்பிடிப்பது அத்தனை சுலபமல்ல. ஏற்கனவே 50-க்கும் மேற்பட்டவர்கள் அந்த வேலையைச் சமாளிக்க முடியாமல் ஓட்டம் பிடித்திருக்க, விமல் மட்டும் தாக்குப்பிடித்தாரா? அதையும் தாண்டி ஸ்ரேயாமனதில் இடம் பிடித்தாரா?

ஸ்ரேயா போடும் இந்த ஆட்டம் இறுதியில் எங்கே போய் முடிகிறது என்பதுதான் ‘சண்டக்காரி’ படத்தின் மையக்கதை.

நடிகர்கள்

‘விமல் வழக்கமான தனது இயல்பான, ஜாலியான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கிறார். குறிப்பாக அப்பாவியான அசிஸ்டென்ட்டாக வரும் காட்சிகளில் விமலின் உடல்மொழியும் டைமிங்கும் ரசிக்க வைக்கின்றன.

படத்தின் உண்மையான கவன ஈர்ப்பு நடிகை ஸ்ரேயா. மாயா என்ற கதாபாத்திரத்தில் ஸ்டைலாகவும் கவர்ச்சியாகவும் நடித்து, தனது அனுபவத்தை வெளிப்படுத்துகிறார். ஹீரோவைக் காட்டிலும் படத்தின் முக்கியமான கதாபாத்திரமாக ஸ்ரேயா இருப்பதால், ஒட்டுமொத்த படத்தையும் தனது தோளில் சுமந்து செல்ல முயற்சித்திருக்கிறார்.

லண்டன் பப்பில் இடம்பெறும் பாடலும், கிராமத்து பின்னணியில் விமலுடன் சேர்ந்து லுங்கி அணிந்து ஆடும் பாடலும் ரசிகர்களை ரசிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளன. பிரபு, கே.ஆர். விஜயா, உமா பத்மநாபன், தேவ் கில் உள்ளிட்ட நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

கதாபாத்திரங்களை அழுத்தமாகவும் வலுவாகவும் எழுதாததால், பல காட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்தாமல் கடந்து செல்கின்றன. அம்ரிஷ் இசையில் இடம்பெற்றுள்ள பாடல்கள், ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த குத்துப்பாடல்களின் நினைவுகளை மீண்டும் கிளறுகின்றன.

விமல் – ஜாலி… ஸ்ரேயா – ஸ்டைல்…

By admin