• Thu. Jul 17th, 2025

24×7 Live News

Apdin News

‘அமெரிக்காவை காப்பதே என் இலக்கு’ – டொனால்ட் டிரம்ப் பிபிசி பேட்டியில் கூறியது என்ன?

Byadmin

Jul 17, 2025


டொனால்ட் டிரம்ப் பிபிசிக்கு சிறப்புப் பேட்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிபிசிக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதின் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறினார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிபிசிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அவர் மீதான நம்பிக்கையை இன்னும் இழக்கவில்லை என்று தெரிவித்தார்.

ஓவல் அலுவலகத்தில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த நேர்காணலில், ரஷ்ய அதிபரை நம்புகிறீர்களா என்று கேட்கப்பட்டபோது, “நான் யாரையும் நம்புவதில்லை” என்று பதிலளித்தார்.

யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பும் திட்டத்தை அறிவித்த டிரம்ப், 50 நாட்களுக்குள் யுக்ரேனுடன் சமாதான ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால், ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். இது நடந்து சில மணிநேரத்திற்குப் பிறகு டிரம்ப் இந்தக் கருத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில் நேட்டோவை காலாவதியான ஒன்று என விமர்சித்திருந்த டிரம்ப், தற்போது நேட்டோ அமைப்பின் பொதுவான பாதுகாப்புக் கொள்கைக்குத் தனது ஆதரவை உறுதிப்படுத்தினார்.

By admin