• Mon. Jul 13th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு!

Byadmin

Jul 13, 2026


அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே புதிய இராணுவ மோதல்கள் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இன்று திங்கட்கிழமை (13) சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எரிசக்தி விநியோகம் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.

சர்வதேச அளவுகோலான பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 3 சதவீதத்துக்கும் மேலாக உயர்ந்து, ஒரு பேரல் சுமார் 78.50 டொலரை எட்டியுள்ளது. அதேபோல்,அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ(WTI)கச்சா எண்ணெய்விலையும் 3 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்து , ஒருபேரல் 73.70 டொலருக்கு விற்பனையாகின்றது.

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் தெற்குப் பகுதியில் அமெரிக்க ராணுவம் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரானின் முக்கிய துறைமுக நகரங்களான பந்தர் அப்பாஸ் (Bandar Abbas), சிரிக் (Sirik), ஜாஸ்க் (Jask) மற்றும் கெஷ்ம் தீவில் (Qeshm Island) வெடிச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்தி: அமெரிக்கா – ஈரான் இடையே போர்: மத்திய கிழக்கில் பதட்டம்; ஹார்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியது!

வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் விநியோகம் தடைபட்டால், அது உலகளாவிய விநியோகத்தை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கி விலையை இன்னும் உயர்த்தக்கூடும் என்று முதலீட்டாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய தாக்குதல்கள், உலக எரிசக்தி சந்தையில் பெரும் நிச்சயமற்ற சூழலை உருவாக்கியுள்ளது.

By admin